Sunday, February 27, 2011

கிரிக்கெட்




                   இந்தியா , இங்கிலாந்து அணிகள்  மோதிய  உலகக்கோப்பை  கிரிக்கெட்   
மேட்ச்  பார்த்தேன். 20  20  கிரிக்கெட்  போல   மகா  விறுவிறுப்பு. 338 
 ரன்கள்  இந்தியாகுவித்ததும் வெற்றி  உறுதி  என்று  நினைத்தேன் . 
ஆனால், இந்தியா போன்ற  உயிரற்ற பிட்ச்களில் 350 கூட   பாதுகாப்பான 
 ஸ்கோர் என்று கூறமுடியாது . தோல்வியின்  விளிம்புக்கே  சென்றுவிட்ட
 இந்தியா மேட்சை  (  Tie )  செய்தது  சற்றே  ஆறுதலான  விசயம்.  சச்சின் 
 ரசிகர்களுக்கு  அவரின்  சதம் சரியான திருப்பதி  லட்டு .        

Wednesday, February 23, 2011

பிடிச்சிருக்கா ? ( சிறுகதை )



                      " நட்சத்திரா,  நட்சத்திரா..."  என்று என்னை
கூப்பிட்டுக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தனர் அப்பா அம்மா இருவரும்.


                       "என்னப்பா?" என்று நான் கேட்க ,

                         "அடுத்த வாரம் நடக்கப்போற உன் கல்யாணத்துக்காக பட்டுப்புடவை ,  நகைகள் எல்லாம் வாங்கி வந்திருக்கோம்.  பார்த்து  சொல்லும்மா  எப்படி  இருக்குன்னு ?"

          
                          "நட்சத்திரா,  உனக்குப்  பிடிச்ச  மெரூன்கலர்ல பட்டுப்புடவை  எடுத்து  வந்திருக்கோம் . விலை  ஒரு லட்சம்  ரூபாய் . பிடிச்சிருக்கா ?"


                        " இந்த  வைர நெக்லசை பாரும்மா.  லேட்டஸ்ட்  டிசைனாம் .  உனக்குன்னே   செஞ்ச  மாதிரி  இருக்கு ."


                       "இது   புது   மாடல் லேடீஸ்  வாட்ச் . பத்தாயிரம்  ரூபாய்.  பிடிச்சிருக்கா ? "


                      "இது   நீ   ரொம்ப   நாளா   கேட்டுக்கிட்டிருந்த  தங்க  கொலுசு .  பிடிச்சிருக்கா   பாரு ,  இல்லேன்னா   மாத்திக்கலாம் ." 


                    " இப்படிப்   பிடிச்சிருக்கா , பிடிச்சிருக்கா  என்று   கேட்ட   அப்பா , அம்மா   பதினாறு   வயசு  வித்தியாசமுள்ள   மாமா   மகனை   கல்யாணம்  பண்ணிக்க   உனக்கு  பிடிச்சிருக்கா ? " என்று  மட்டும்  கடைசிவரை   என்னிடம்   கேட்கவே   இல்லை .  

                         












                            
                        
                       

பள்ளிக்கடன் (சிறுகதை)


                  கங்காதரனுக்கு தன் மகனின் செயல் ஆச்சரியமளிக்க அவனிடம்
கேட்டேவிட்டார்.

                      "ஏம்ப்பா,பத்தாம் வகுப்பு  பொதுத் தேர்வுல மாவட்டத்திலேயே
முதல் மார்க் வாங்கி பாஸாகி இருக்கே நீ .அதனால ,நெறைய தனியார்  பள்ளிங்க எங்க ஸ்கூல்ல வந்து பிளஸ்டூ  சேருங்க ,பீஸ்னு ஒரு பைசா  கட்ட வேணாம்னு போட்டி போட்டுக்கிட்டு  கூப்புடுறாங்க .நீ என்னடான்னா  முன்ன  படிச்ச கவர்ன்மெண்ட் ஸ்கூல்லதான் பிளஸ்டூ-வும்  படிப்பேன்னு  பிடிவாதமா இருக்கே. என்ன காரணம்ப்பா ? " என்றார் .

                 
                "அப்பா நீங்க ஒரு விவசாயி.  நீங்க விதைச்ச விதை வளர்ந்து   செடியாகி,  பூத்து, காய்கிறேத்துக்கு  நீர் பாய்ச்சி,  களையெடுத்து, உரம் வச்சி  எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பீங்க?  அது பலன்தர்ற  நேரத்துல  வேற  யாராவது  அறுவடை செஞ்சிகிட்டுப்  போனா உங்க  மனசு எவ்வளவு  வேதனைப்படும் ?  அதுமாதிரி  தாம்ப்பா , இவ்வளவு  நாள்  கஷ்டப்பட்டு  என்னை  மாவட்டத்திலேயே  முதலாவதா  வர  பாடுபட்ட  ஆசிரியர்களையும் , ஸ்கூலையும்  மறந்துட்டுப்  போறதும்கூட.  விதைச்சவங்களே அதோட  முழுப்பலனையும்  அடையணும்னுதான் நான்  முன்ன  படிச்ச ஸ்கூல்லயே   படிக்க  முடிவெடுத்தேன் ... " என்று  சொல்லிக்   கொண்டேபோன  மகனின் பேச்சிலிருந்த  அர்த்தம்  கங்காதரனை  பிரமிக்க  வைத்தது .        
 























Monday, February 21, 2011

என்னைப் பற்றி..

எழுத்தாளன், உதவி வசனகர்த்தா, உதவி இயக்குனர் என்று சின்னத்திரையில் பல முகங்கள் கொண்டிருந்தாலும் இப்பதிவுலகத்திற்கு புதியவனான என்னை வழிநடத்தி செல்ல உங்களை அன்போடு வரவேற்கிறேன்.

Tuesday, February 8, 2011

என் முதல் பதிவு

பதிவுலகுக்கு புதியவனான  என்னை உங்களுடன் இணைத்துக்  கொள்வதில்  பேரு மகிழ்ச்சி அடைகிறேன்