Wednesday, February 23, 2011

பிடிச்சிருக்கா ? ( சிறுகதை )



                      " நட்சத்திரா,  நட்சத்திரா..."  என்று என்னை
கூப்பிட்டுக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தனர் அப்பா அம்மா இருவரும்.


                       "என்னப்பா?" என்று நான் கேட்க ,

                         "அடுத்த வாரம் நடக்கப்போற உன் கல்யாணத்துக்காக பட்டுப்புடவை ,  நகைகள் எல்லாம் வாங்கி வந்திருக்கோம்.  பார்த்து  சொல்லும்மா  எப்படி  இருக்குன்னு ?"

          
                          "நட்சத்திரா,  உனக்குப்  பிடிச்ச  மெரூன்கலர்ல பட்டுப்புடவை  எடுத்து  வந்திருக்கோம் . விலை  ஒரு லட்சம்  ரூபாய் . பிடிச்சிருக்கா ?"


                        " இந்த  வைர நெக்லசை பாரும்மா.  லேட்டஸ்ட்  டிசைனாம் .  உனக்குன்னே   செஞ்ச  மாதிரி  இருக்கு ."


                       "இது   புது   மாடல் லேடீஸ்  வாட்ச் . பத்தாயிரம்  ரூபாய்.  பிடிச்சிருக்கா ? "


                      "இது   நீ   ரொம்ப   நாளா   கேட்டுக்கிட்டிருந்த  தங்க  கொலுசு .  பிடிச்சிருக்கா   பாரு ,  இல்லேன்னா   மாத்திக்கலாம் ." 


                    " இப்படிப்   பிடிச்சிருக்கா , பிடிச்சிருக்கா  என்று   கேட்ட   அப்பா , அம்மா   பதினாறு   வயசு  வித்தியாசமுள்ள   மாமா   மகனை   கல்யாணம்  பண்ணிக்க   உனக்கு  பிடிச்சிருக்கா ? " என்று  மட்டும்  கடைசிவரை   என்னிடம்   கேட்கவே   இல்லை .  

                         












                            
                        
                       

No comments:

Post a Comment