Friday, March 25, 2011

கிரிக்கெட்

காலிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி கூட்டு முயற்சிக்கு 
கிடைத்த வெற்றி . ஃபீல்டிங் ,பௌலிங் இரண்டிலும் நல்ல முன்னேற்றம் .
ஆஸ்திரேலியாவை ஆரம்பம் முதலே அதிகம் ரன் அடிக்கவிடாமல் 
பார்த்துக் கொண்டது சேஸிங்போது நல்ல பலனைக் கொடுத்தது .இது 
யுவராஜின் உலகக் கோப்பைப் போல. தொடர்ந்து பேட்டிங், பௌலிங் 
இரண்டிலும் அசத்திவருகிறார் .கடைசி கட்ட டென்ஷனை குறைத்தது  
ரெய்னா தான்.அதற்காக அவருக்கு ஒரு ஸ்பெஷல்  தேங்க்ஸ் .சச்சின் 
சதத்தில் சதம் காணாவிட்டாலும் 18,000 ரன்களை கடந்து இன்னுமொரு  
சாதனையை படைத்தார் .மொகாலி மைதானம் இப்போதே திருவிழா 
பரபரப்புக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது .ஏனென்றால் நம் பிரதமர் 
மேட்ச்சை பார்க்க வருவதோடு பாகிஸ்தான் பிரதமர் ,ஜனாதிபதி 
இருவரையும் அழைத்துள்ளார் . 

 Suresh Raina gives Yuvraj Singh a hug after the pair took India into the semi-final

பங்காளி பாகிஸ்தானை மீண்டும் மண்ணை கவ்வ வைக்க ஒரு 
சந்தர்ப்பம்.பயன்படுத்திக் கொள்வார்கள் நம்மவர்கள் என்றே 
நினைக்கிறேன் .

          உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவை ,பாகிஸ்தான் ஒரு
முறைகூட வென்றதில்லை என்பது இன்னொரு இனிப்பான செய்தி .             

Monday, March 21, 2011

கிரிக்கெட்

மீண்டும் ஒரு முறை இந்திய அணியின் மிடில் ஆர்டர் ரவிராம்பால் என்ற சுனாமியால் நிலைகுலைந்து  போனது .யுவராஜ் மட்டும் தாக்குப் 
பிடித்து சதம் அடித்து சென்னை ரசிகர்களை குஷிப்படுத்தினார்.இம்முறை 
பௌலிங்கும் கொஞ்சம் எடுபட மேற்கிந்திய தீவுகள் அணியை 188 -க்குள் 
சுருட்ட முடிந்தது. இனிமேல் தான் காலிறுதி ,அரையிறுதி ,இறுதிப் 
போட்டி என்று நிஜ ஆட்டம் ஆரம்பம் .காலிறுதியில் நடப்பு சாம்பியன் 
ஆஸ்திரேலியாவை வெல்வதென்பது சாதாரண காரியமல்ல .ப்ரெட் லீ ,
ஜான்சன் ,ஷான் டைட்,போன்ற வேகப்பந்து வீச்சளார்களை எதிர்
கொண்டு ரன் குவிப்பது மிகவும் சிரமம் .வியாழன் விடியல் 
(24 -3 -11 )  இந்தியாவுக்கு சாதகமாய் அமைய 
எல்லோரும் பிரார்த்திப்போம் .    

Sunday, March 20, 2011

நாலு ஏக்கர் (சிறுகதை)

               பண்ணையார்  பரந்தாமனின்     கார் தோட்ட வீட்டின் முன்  வந்து நிற்க, வயலில் வேலை செய்து கொண்டிருந்த வேலையாள் கந்தசாமி ஓடி வந்தான்.
      
காரிலிருந்து இறங்கிய பரந்தாமன், “ என்ன கந்தசாமி செளக்கியமா? பாத்து ரொம்ப நாளாச்சு” என்றார்.


“செளக்கியந்தாங்கய்யா.. நீங்க முன்ன மாதிரி அடிக்கடி தோட்டத்துக்கு வர்றது இல்லங்கிறது தான் பெரிய குறை?"

 "என்ன கந்தசாமி பண்றது ?மொதல்ல விவசாயம் மட்டுந்தான் ,
 அதனால அடிக்கடி வரமுடிஞ்சது .இப்ப ஊர்த்தலைவர் ,கோயில் 
தர்மகர்த்தான்னு நெறைய பொறுப்புகள்ல  இருக்கிறதால  அதிகம்
 இங்க  வரமுடியல . "


"வெயிலுக்கு எதமா எளநி வெட்டி வரட்டுங்களா  எசமான்?"

"அதெல்லாம் ஒண்ணும் வேணாம்.வடக்கால இருக்குற நாலு ஏக்கர்
நெலத்துல நடவு வேலை முடிஞ்சுதா கந்தசாமி ?"

"நாலு நாளைக்கு முன்னமே முடிஞ்சுதுங்க அய்யா !"

"அறுவடைவரைக்கும்  இனிமே அது உம்பொறுப்பு .என்னை எதிர்
 பாக்காம மருந்து ,யூரியா ,தண்ணி விடறதுன்னு எல்லா வேலையும் 
கவனமா செய் .ஏன்னா ஆஸ்திரேலியாவுல இருக்கிற எம் மகளைப்  
பாக்க நானும்,என் மனைவியும் போறோம் .வர எப்படியும் மூணு 
மாசமாகும் ."

"ஐயா...நா ஒங்ககிட்ட ஒரு சேதி சொல்லணும் .என்தூரத்து  மாமா 
ஒருத்தர் டவுன்ல ஒரு ஓட்டல் கடை நடத்திகிட்டு இருக்கார் .அங்க 
வியாபாரம் நல்லா நடக்கிறதால உதவிக்கு நம்பிக்கையா ஒரு ஆள் 
வேணும்னு என்னைக் கூப்பிடறார் .அதான்,உங்ககிட்ட சொல்லிட்டு 
இந்த மாசத்தோட நின்னுக்கலாம்னு..." என்று இழுத்தான் கந்தசாமி .

"இத பார் கந்தசாமி ...இந்த நெல் அறுவடைவரைக்கும் இரு .
அப்புறம் நானே  உன்னை சந்தோசமா அனுப்பி வைக்கிறேன். "

"இல்லீங்க ஐயா...அவருக்கு உடனடியா ஆள் தேவையாம்.ஒரு 
வாரத்துக்குள்ள எம்பதில சொல்லச் சொல்லிருக்கார் ."

"இப்படி திடீர்னு நின்னுக்கறேன்னு சொன்னா நா வேற ஆள் உடனே 
தேடறது கஷ்டமில்லியா ?"

"நா வேணா வேற ஆள ஏற்பாடு பண்ணிட்டு கிளம்பட்டுமாய்யா?" 

"அதெல்லாம் சரியா வராது .அறுவடைவரைக்கும் இருந்துட்டு போ "
அதிகாரத் தோரணையில் சொன்னார் பரந்தாமன் .


அதற்குமேல் முதலாளியிடம் எதுவும் பேசமுடியாமல்,"சரிங்கய்யா" 
என்றான் வேண்டாவெறுப்பாய் .

'பத்து வருஷம் விசுவாசமாய் வேலை செஞ்சு என்ன பிரயோஜனம் ?நான் 
இன்னும் முன்னேற ஒரு சந்தர்ப்பம் வரும்போது முதலாளியே முட்டுக்
கட்டை போடலாமா? முதலாளி வர்க்கம்,தொழிலாளி வர்க்கத்தை 
வளரவே விடாது என்பதெல்லாம் உண்மைதானா? முதலாளி மேல் 
கோபம்,கோபமாய் வர அதை விவசாயத்தில் காட்டினான்.நெல் 
வயலுக்கு சரிவர தண்ணீர் விடாமல் மருந்து,உரங்களும் வைக்காமல் 
கடமைக்கு வேலை செய்தான் .அமோகமாய் விளைச்சல் தரவேண்டிய 
பயிர்கள் கிட்டத்தட்ட கருகும் நிலைக்கு வந்து விட்டன .அதைப் பார்த்த 
கந்தசாமிக்கு முதலாளியை பழிவாங்கிவிட்டது  போல் தோன்றியது .

அறுவடைக்கு ஒருவாரம் முன்னதாக ஆஸ்திரேலியாவிலிருந்து 
கந்தசாமிக்கு போன் செய்த பண்ணையார் ,"பத்து வருஷமா எங்கிட்ட 
விசுவாசமா இருந்த உன்னை வெறும் கையோட அனுப்ப மனசில்ல 
எனக்கு .அதான், அறுவடை வரைக்கும் இருக்கச் சொன்னேன் .அந்த நாலு 
ஏக்கர் நெல்லையும் நீயே அறுவடைசெஞ்சு எடுத்துக்கோ .உனக்கு 
இப்படியொரு இன்ப அதிர்ச்சி கொடுக்கணும்னுதான் இத்தனை நாளும் 
நான் சைலன்ட்டா இருந்தேன் "என்று சொல்லி முடிப்பதற்குள் ,
சைலன்ட்டாய் மயங்கி விழுந்தான் கந்தசாமி .     
           
            

          
  
                   


                      
        
               

        






                                

Sunday, March 13, 2011

கிரிக்கெட்

மீண்டும் ஒருமுறை இந்தியாவின்சொதப்பல் ஆட்டத்தைப் பார்த்தபோது 
எரிச்சலே வந்தது .வலுவான அடித்தளத்தை சச்சினும் ,சேவாக்கும் 
அமைத்துக் கொடுத்தும் மிடில்ஆர்டர்பேட்ஸ்மேன்கள் அதைப்
 பயன்படுத்திக்கொள்ளாமல் எரிச்சலூட்டினர் .இதைத் தான் சகித்துக் கொண்டோம் என்றால் நெஹ்ராவின் கடைசி ஓவர் மறக்க முடியாத ,
மன்னிக்க முடியாத ஒன்று .டோனிக்கும் இப்போது கொஞ்சம் 
தலைக்கனம் ஏறிவிட்டதாகவே தோன்றுகிறது .தனக்கு பிடித்துவிட்டால் சரியாக விளையாடாத வீரர்களுக்கும் தொடர்ந்து வாய்ப்பளிக்கிறார் .
இது எதில் போய்முடியுமோ? உலகக் கோப்பை இம்முறையும் கனவாகிப் 
போய்விடக்கூடாது என்பதே ஒவ்வொரு இந்தியனின் விருப்பம் . 
சவுத் ஆப்ரிக்காவுக்கு எதிரான சச்சினின் சதம் மட்டுமே என் போன்ற 
ரசிகர்களுக்கு சிறிது ஆறுதல் .  

Friday, March 11, 2011

கிரிக்கெட்

           
             கத்துக்குட்டி  நெதர்லாந்திடமே போராடி ஜெயித்த இந்தியா வலுவான தென்ஆப்ரிக்கா ,ஆஸ்திரேலியா போன்ற டீம்களை எல்லாம் 
வென்று கோப்பையை வெல்லுமா என்றே தெரியவில்லை.கிரிக்கெட்
வல்லுனர்களும்,மீடியாக்களும்இந்தியாவை ஓவராகப் புகழ்ந்து காலி  
செய்துவிடுவார்களோ என்ற அச்சமே எழுகிறது .இங்கிலாந்துடன்    
மோதியபோதேஇந்தியாவுக்கு எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுவிட்டது . 
சுதாரித்தால் கப்பு (Cup)இல்லாவிட்டால் ஆப்பு .