உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழாவுக்குப் பிறகு தமிழ்நாட்டில்
தேர்தல் திருவிழா நடந்து முடிந்திருக்கிறது.முடிவுகளை தெரிந்து கொள்ளத்தான் நீண்ண்ண்...ட நாட்கள் காத்திருக்க வேண்டி
இருக்கிறது. மரண அவஸ்தை என்பார்களே அதைத்
தான் எல்லா அரசியல்வாதிகளும் இப்போது அனுபவித்துக்
கொண்டிருப்பார்கள் . ஒவ்வொரு முறையும் தேர்தல் கமிஷன்
ஆரம்பத்தில் கெடுபிடியாய் இருப்பதும் , கடைசி கட்டத்தில் அவர்கள்
கண்ணில் மண்ணை தூவி விட்டு அரசியல்வாதிகள் பணத்தால் தீர்ப்பை
விலைக்கு வாங்குவதும் நடந்து கொண்டே இருக்கிறது . இன்றைக்கு
தேர்தலில் நிற்க நல்லவன் என்ற தகுதியெல்லாம் மலையேறி போயாச்சு.
பணபலம் படைத்தவனாக , பாவ செயல்களுக்கு அஞ்சாதவனாக இருந்தால்
மட்டுமே சீட் வழங்கப்படுகிறது .இவர்கள் ஜெயித்தால் நாட்டுக்கு நல்லது
தான் செய்வார்களா ? செய்யத்தான் விடுவார்களா ?
காமராஜர் போல, கக்கன் போல, அண்ணாதுரை போல யாராவது ஒரு நல்ல தலைவன் வந்து நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாற்ற
மாட்டானா ? என்ற ஏக்கம் எல்லோரைப் போல எனக்கும் உண்டு .அதுவரை
"சொல்லடி பாரத மாதா - நீ
சுதந்திரம் பெற்றது தீதா "
என்றே புலம்பத் தோன்றுகிறது.
No comments:
Post a Comment