நாராயணசாமி ஊரறிந்த சமூகசேகவர். அவர் திடீரென்று ஹார்ட்
அட்டாக்கில் இறந்துபோக, அவருக்கு இறுதிமரியாதை செலுத்த
சொந்த ஊரிலிருந்து மட்டுமில்லாமல் அக்கம்,பக்க ஊரிலிருந்தும்
நிறையபேர் திரண்டிருந்தனர்.
அதில் ஒருவர், "நாராயணசாமி மனுஷங்ககிட்ட மட்டுமில்ல,வாயில்லா
ஜீவன்கள்கிட்டயும் அன்பு காட்டினவர். ஆறுமாசம் முன்ன ஒரு குதிரை
அடிபட்டு,ஒடம்பெல்லாம் காயத்தோட உயிருக்கு போராடிகிட்டு நம்ம
ஊருக்குள்ள எப்படியோ வந்தப்ப நாம யாரும் அத கண்டுக்கல. அப்ப
நாராயணசாமி தான் டவுன்ல இருந்து வெட்னரி டாக்டரை கூட்டிவந்து
வைத்தியம் பாத்து குதிரைய பொழைக்க வெச்சார்" என்றார்.
"சமூகசேவைக்காக கல்யாணமே செஞ்சுக்காதவர்.இப்பக்கூட பாருங்க
கண்களையும் தானம் பண்ணியிருக்கார்"என்று இன்னொருவர் புகழ,
"சரி,சரி பொழுது போயிட்டிருக்கு.பாடிய எடுத்துடலாம்"என்று ஊர்த்
தலைவர் சொல்ல,
"தலைவரே,நாராயணசாமி செத்திருக்கிறது சனிக்கிழமை.சனிப்பொணம்
தனியா போவாது,துணை கேக்கும்னு சொல்வாங்க.அதனால, அவர்
பாடியோட ஒரு கோழிக்குஞ்சை கொன்னு பொதைச்சுடலாம்" என்று
மாரியம்மன் கோயில் பூசாரி சொல்ல,தலைவரோடு ஊரும் ஏற்றுக்
கொண்டது.
நாராயணசாமியின் உடல் மயானக்குழிக்குள் இறக்கப்பட்டு,கோழிக்குஞ்சு
ஒன்றையும் அறுத்து அதே குழியில் போட்டபோது,"பாவிகளா! என்னை
ரெண்டாவது முறையா சாகடிச்சுட்டீங்களே"என்று நாராயணசாமியின்
ஆத்மா அலறியது யாருக்கும் கேட்கவேயில்லை!
4 comments:
unmaiyai thane koorineer manushanagiya nam purnjuka moliyuma apadi puranjal tan andha koliyai viduvoma nalla karuthu valzga valamudan balamurugan bangalore

கதை- நிதர்சனம்.
Post a Comment