சேவாக்கைப் பற்றி என்ன சொல்ல? டெஸ்ட் மேட்சைக்கூட ஒருதினப்
போட்டி போல ஆடும் சேவாக், நேற்று ஒருதினப் போட்டியை 20 ஓவர்
கிரிக்கெட் போல ஆடி வானவேடிக்கை நடத்திவிட்டார். நேற்றைய
போட்டியை லைவ்வாக பார்த்தவர்கள் அதிர்ஷ்டம் செய்தவர்கள்.சேவாக்
25 பவுண்டரிகளும், 7 சிக்சர்களும் அடித்ததை ரசிகர்கள் மட்டுமல்ல,
மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களும் வேடிக்கை மட்டுமே பார்க்க
முடிந்தது.எதையும் தடுக்க முடியவில்லை.
சச்சின் 147 பந்துகளில் 200 அடித்தாரென்றால்,சேவாக் 140 பந்துகளில் 200
அடித்து சாதனையை மாற்றி எழுதியுள்ளார்.ஒரு இந்தியனின் சாதனையை
ஒரு இந்தியனே உடைத்ததை நினைத்து, ஒரு இந்தியனாய் பெருமை
கொள்கிறேன்,கர்வம் கொள்கிறேன்.சச்சின் 200 அடித்தது குவாலியரில்.
சேவாக் 219 அடித்தது இந்தூரில்.இரண்டும் மத்தியப்பிரதேசத்தில் உள்ள
மைதானங்கள்.இந்த ஒற்றுமையில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்றே
தோன்றுகிறது. ஏனெனில் சேவாக்,சச்சினை குருவாக மதிப்பவர். குரு
வழியில் சென்றே சாதனை படைத்திருக்கிறார். இதேபோல் இன்னும் நிறைய சாதனைகளை குருவும்,சிஷ்யனும் படைக்க வேண்டும் என்பதே
என் போன்ற ரசிகர்களின் ஆசை,கனவு எல்லாம்.
2 comments:
Arumaiyana pathivu.
நன்றி டேனியல் ஸார்.
Post a Comment