இங்கிலாந்தில் பட்ட அவமானக்கறையை துடைக்க மேற்கு இந்தியதீவுகள்
அணியுடனான மோதலை பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்துவிட்டது நம்
இந்திய அணி. அதன் முதல்கட்டமே, முதல் டெஸ்ட்டின் வெற்றி. அறிமுக
வீரர் அஸ்வின் 9 விக்கெட்களை வீழ்த்தி தன் தேர்வை நியாயப்படுத்தி
இருக்கிறார். மேற்கு இந்தியதீவுகள் அணி முதல் இன்னிங்ஸ் லீடை
சரிவர பயன்படுத்திக் கொள்ள தவறியதே அதன் தோல்விக்குக் காரணம்.
சச்சின் 100வது சதம் அடிக்காமல் வழக்கம்போல ஏமாற்றினார்.இருந்தாலும்
15000 ரன்கள் என்ற சாதனையை படைத்து ஆறுதல்பரிசு அளித்திருக்கிறார் நம் எல்லோருக்கும். அடுத்துவரும் டெஸ்ட்டிலாவது அவர் வரலாற்று
சாதனை படைப்பார் என்று நம்புவோம்.
No comments:
Post a Comment