பெட்ரோல் விலைகுறைப்பு பொதுமக்களுக்கு சந்தோஷம் தரும்
விஷயம் என்றாலும்,அதன் பின்னால் இருக்கும் அரசியலை கூர்ந்து
நோக்கினால் தான் தெரியும்.இந்த விலைகுறைப்பு மம்தாபானர்ஜியின்
மிரட்டலுக்குப் பயந்தா?அல்லது, நான்கைந்து மாதத்தில் வரப்போகும்
உத்திரப்பிரதேச தேர்தலை மனதில் வைத்தா என்பது மன்மோகன் அரசுக்கே
வெளிச்சம். இவர்களின்அரசியல் ஆட்டத்துக்கு மக்களை பகடை காய்களாக
பயன்படுத்துவது எந்தவிதத்தில் நியாயம் ? மக்கள் அத்தியாவசியப்
பொருட்களை வாங்கும் சக்தியை மட்டுமல்ல,இதையெல்லாம் எதிர்த்து
போராடும் சக்தியையும் இழந்து விட்டார்கள் என்பதே நிதர்சன உண்மை.
நம்முடைய இந்த மனோபாவம் தான் அரசியல்வாதிகளுக்கு எதையும்
செய்யும் துணிச்சலை கொடுக்கிறது.போராட்டகளம் தயாராய்த் தான்
இருக்கிறது.போராடத்தான் மக்கள் இல்லை!
No comments:
Post a Comment